பாகிஸ்தானில் தனது தாயார் வாகன விபத்தில் இறந்ததாகப் பொய்யுரைத்து மூன்று காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 3.7 மில்லியன் டாலருக்கு அதிகமான பணத்தைப் பெற சிங்கப்பூரர் ஆபிரகம் ராக் முயன்றார்.
போலிஸ் புகார், மருத்துவ அறிக்கைகள், இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை அவர் சமர்ப்பித்தார். ஆனால் அவரது தில்லு முல்லு காப்புறுதி நிறுவனங்களிடம் செல்லுபடி ஆகவில்லை. பாகிஸ்தான் வரை சென்று அவை விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர்ந்தனர்.
இறந்ததாகச் சொன்ன அந்தத் தாயாருடனேயே ஆபிரகம் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானார்.
இந்த விசித்திரமான வழக்கைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள நாளைய தமிழ் முரசைப் படிக்கவும்...

