எழுதப் படிக்கத் தெரியாத வாடிக்கையாளரை ஏமாற்றிய முன்னாள் வங்கி அதிகாரிக்குச் சிறை

எழுதப்படிக்கத் தெரியாத வாடிக் கையாளரின் பணத்தை சூறை யாடிய முன்னாள் வங்கி அதி காரிக்கு நேற்று 42 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டி லிருந்து 2013ஆம் ஆண்டு வரை யில் யூஓபி வங்கியில் பணியாற்றிய 38 வயது யாப் பின் சுன் 200,000 வெள்ளிக்கு மேல் வாடிக்கை யாளரை ஏமாற்றியிருக்கிறார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் அவர் மீது நான்கு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளும் ஒரு தில்லு முல்லு குற்றச்சாட்டும் சுமத்தப் பட்டன.
நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
எழுதப் படிக்கத் தெரியாத  வாடிக்கையாளரான 68 வயது இங் ஹோக் செங் ஹவ்காங்கில் ‘மினிமார்ட்’ ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் யாப்பைச் சந்தித்த அவர் தனது சேமிப்புகளை ஆபத்து குறைவாக உள்ளவற்றில் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
அப்போது நிதி நெருக்கடியி லிருந்த யாப் அவரது வீட்டுக்குச் சென்று புதிய வங்கிக் கணக்கு ஒன்றைத் திறக்கவும் டெபிட் அட்டையைப் பெறவும் அவரிடம் சில படிவங்களில் கையெழுத்து களைப் பெற்றார். 
வங்கிப் படிவங்களில் தனது வீட்டின் முகவரியை பூர்த்திசெய்த யாப் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அதன் மூலம் ‘டெபிட்’ அட்டையையும் பெற்றார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon