தாயார் இறந்துவிட்டதாகக் கூறி காப்புறுதி நிறுவனங்களிடம் $3.7 மி. மோசடி முயற்சி

தாயார் இறந்துவிட்டதாகக் கூறி காப்புறுதி நிறுவனங்களிடம் $3.7 மி. மோசடி முயற்சி

1 mins read
92c76752-f816-4ec0-a5cf-df75f0c656fc
நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையான ஆப்ரஹாம் ராக்கும் அவரது தாயார் தாலட் ஃபர்மனும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கல்லறையும் காணவில்லை, இறப்புச்சான்றிதழும் பொய். ஆனால் இவற்றையெல்லாம் காரணமாக வைத்து தாய் இறந்து விட்டதாகக் கூறிய சிங்கப்பூரரான ஆப்ரஹாம் ராக், மூன்று காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றி 3.7 மில்லியன் வெள்ளி காப்பீட்டுத் தொகையை பெற முயற்சி செய்த தாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் நிகழ்ந்த போக்குவரத்து விபத்தில் தமது தாயார் ஃபர்மன் இறந்துவிட்டதாக அவர் கூறினார். இதை உறுதிப்படுத்தும் வகை யில் 'கிரேட் ஈஸ்டர்ன் லைஃப் இன்‌ஷுரன்ஸ்', 'எம்எஸ்ஐஜி இன் ‌ஷுரன்ஸ்', 'ஏஎக்ஸ்ஏ இன்‌ஷு ரன்ஸ்' ஆகிய மூன்று நிறுவனங் களிடம் காவல்துறை அறிக்கை, மருத்துவ சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் போன்றவற்றை அவர் சமர்ப்பித்தார். ஆனால் அவருடைய ஆவணங் களில் சந்கேகம் ஏற்பட, காப்புறுதி நிறுவனங்கள் பாகிஸ்தானில் விசாரணை நடத்தின. இதில் ராக் குறிப்பிட்டதுபோல அவரது தாயாரின் கல்லறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவர் சமர்ப்பித்த ஆவணங் களும் போலியானது என்பது தெரிய வந்தது.