சிங்கப்பூரில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர்களை ஒரே இடத் தில் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய உறுப்பு மாற்று நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் அமைந்துள்ள அந்த நிலையம், உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேம்படுத்தவும் உறுப்புகளைத் தானமாகப் பெறும் முயற்சிகளை வலுப்படுத்தவும் பேருதவியாக இருக்கும். மருத்துவர்கள் மட்டுமல்லாமல் ஆய்வு, கல்விமான்களையும் சிங் ஹெல்த்தின் டியூக்-என்யூஎஸ் உறுப்பு மாற்று சிகிச்சை நிலையம் ஒருங்கிணைக்கும். மேலும் மருத்துவமனையில் உள்ள அனைத்து உடல் உறுப்பு சிகிச்சைகளையும் திசு, உயிரணு மாற்று சேவைகளையும் ஒன்றி ணைத்து நிலையம் செயல்படும். சிறுநீரகம், கல்லீரல், இதய மாற்று அறுவை சிகிச்சை, கரு விழிப்படலம், கருப்பை திசு போன்ற சிகிச்சைகளும் இவற்றில் அடங்கும். புதிய நிலையத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய சுகா தார அமைச்சர் கான் கிம் யோங், "சிங்ஹெல்த்தின் நிபுணர்களை ஆய்வு, கல்வி ஆற்றல்களுடன் இணைப்பது புதிய நிலையத்தின் நோக்கம்," என்று குறிப்பிட்டார். "உறுப்பு மாற்று அறுவை சிகிச் சைக்குப் பிறகு உயிர் பிழைக்கும் சாத்தியத்தை அதிகரிக்கும் வழி களை புதிய நிலையம் கண்டறியும். அதோடு நோயாளிகளின் வாழ்க் கைத் தரத்தை மேம்படுத்துவதையும் அறுவை சிகிச்சை செலவுகளை நோயாளிகளுக்குக் கட்டுப்படி யாகக் கூடிய வகையில் வைத்திருப் பதையும் நிலையம் ஆராயும்," என்றார் அவர்.
உறுப்பு மாற்று சிகிச்சையை மேம்படுத்த புதிய நிலையம்
1 mins read