வேலையிடத்தில் மரணம்: மேலதிகாரிக்கு 16 வாரச் சிறை

‘ஸெப் பைலிங்’ கட்டுமான நிறு வனத்தின் வேலையிட மேலதிகாரி ஒருவருக்கு, அங்குள்ள ஊழியர் களுக்கான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றத் தவறியதற்காக 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி கிராஞ்சி லிங்கில் உள்ள கட்டுமான இயந் திர சேமிப்பு கிடங்கில் நிகழ்ந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆறுமுகம் இளங்கோ எனும் ஊழி யர் மரணமடைந்தார்.
விபத்துக்கு தனது கவனக் குறைவு காரணமாக இருந்தாலும் அதை மறைக்க மற்றோர் ஊழிய ரைக் குற்றத்தை ஏற்றுக்கொள்ள தூண்டியதற்காக, டே டோங் சுவான் எனும் அந்த மேலதிகாரிக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின்படி வேலை தொடர்பான முறையான அனுமதி இல்லாமலும் பாரந்தூக்கி பணித்திட்டம் இல்லாமலும் தனது ஊழியர் ஒருவரைப் பாரந்தூக்கும் பணியில் ஈடுபடுத்தியதற்காக கூடுதலாக எட்டு வாரச் சிறைத் தண்டனையும் திரு டேக்கு விதிக் கப்பட்டது.
தனது நிறுவனத்தின் வேலை யிடத்தில் முறையான பாதுகாப்பு விதிமுறைகளின்படி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யத் தவறியதற்காக ‘ஸெப் பைலிங்’ கட்டுமான நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி $290,000 அபராதம் விதிக்கப்பட் டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon