மூதாட்டியை மோதிய உணவு விநியோகிப்பாளர் கைது

மூதாட்டியை மோதிய உணவு விநியோகிப்பாளர் கைது

1 mins read

புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஒரு புளோக்கின் வெற்றுத்தளத் தில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவரை கடந்த வெள் ளிக்கிழமை தனது மின்ஸ்கூட்ட ரில் மோதிய உணவு விநியோகிப் பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். புக்கிட் பாத்தோக் அவென்யூ 6, புளோக் 186ல் நடந்த இச்சம்ப வம் பற்றி போலிசுக்கு இரவு 7.15 மணிக்குத் தகவல் கிடைத் தது. அந்த மூதாட்டி புளோக்கின் வெற்றுத்தளத்தில் அஞ்சல் பெட் டியில் கடிதங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது, மின் ஸ்கூட்டரில் வந்த அந்த ஆடவர் மோதினார். மோதியவுடன் அந்த மாது தரையில் விழுந்துவிட்டார் என்று லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழ் நேற்று தெரிவித்தது. காயமடைந்த மாது சுயநினை வுடன் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் 33 வய தான உணவு விநியோகிப்பாளர் காயம் விளைவிக்கும் வகையில் தனது மின்ஸ்கூட்டரை ஓட்டியதற் காக கைது செய்யப்பட்டார் என் றும் வான் பாவ் செய்தி கூறியது.