கரையோரப் பூந்தோட்டங்கள்: புதிய இடங்கள்,  இலவச அனுமதி

ஆர்க்கிட் மலர் தோட்டங்கள்,  கண்ணாடி மலர்க்கூண்டுகள், நீர்வீழ்ச்சி, ஒளிரும் மரங்கள், உணவகம் போன்ற பலவற்றை உள்ளடக்கிய கரையோரப் பூந் தோட்டங்கள் மேலும் மெருகூட் டப்படுகிறது.
புதிய சமூக இடங்கள் சேர்க் கப்பட்டு பைனியர், மெர்டேக்கா தலைமுறையினருக்கு இலவச அனுமதியும் வழங்கப்படவிருக் கிறது. வார இறுதி சந்தைகள் உட்பட ஏராளமான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பேஃபிரண்ட் எம்ஆர்டி அருகே அமைந்துள்ள கரை யோரப் பூந்தோட்டங்களில் கட் டணமில்லாமல் இடங்களை அதிகரிக்கும் நோக்கோடு நேற்று 5,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ‘பேஃபிரண்ட் பிளாசா’ தொடங்கி வைக்கப்பட்டது.
அதோடு வரும் ஜூன் மாதத் திலிருந்து தற்போது 60, 70 வயதுகளில் உள்ள பைனியர், மெர்டேக்கா தலைமுறையினர் ஒரு வருட காலத்திற்கு ஒவ் வொரு மாதமும் இரண்டாவது செவ் வாய்க்கிழமை அன்று மலர்க் கூண்டில் (Flower Dome) இலவசமாக நுழைய அனுமதிக்கப் படுவர். இவ்வாண்டு வரிசையாக பல இலவச நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன.
பிளாசாவுக்குள் அமைந்துள்ள 2,000 சதுர மீட்டர் பேஃபிரண்ட் பெவிலியனில் வாடகையில்லாமல் நிகழ்ச்சிகள் நடத்தவும் சமூக அமைப்புகளுக்கு அனுமதி வழங் கப்படும் என்று நேற்றைய நிகழ்ச் சியில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
சென்ற வெள்ளிக்கிழமையி லிருந்து வார இறுதி சந்தையும் தொடங்கியது. 
சமூக நிறுவனங்களின் 30 கடைகளில் பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன.
மூத்த குடிமக்கள், இளையர் களுக்கான பசுமைத் தோட்டமும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என்றார் அமைச்சர்.
கடந்த 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 50 மில்லியனுக்கும் மேற்பட்டோரை ஈர்த்துள்ள கரையோரப் பூந் தோட்டங்களை சிங்கப்பூரர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய இன்னும் அதிக அம்சங்கள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கரையோரப் பூந்தோட்டங் களில் நுழைவுக் கட்டணமில்லா 96 விழுக்காடு இடங்களில் அண்மையில் திறக்கப்பட்ட பேஃபிரண்ட் பிளாசாவும் ஒன்று.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon