இருநூற்றாண்டு நிறைவின் முதல் சாலைக்காட்சி தொடங்கியது

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் ஐந்து சாலைக்காட்சிகள் நடத்தப் பட இருக்கின்றன.
அதில் ஒன்று விஸ்மா கேலாங் சிராயில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தச் சாலைக்காட்சி அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை நடை பெறும். நடத்தப்படும் சாலைக் காட்சிகளை அனைவரும் எளிதில் சென்று பார்க்க அவை குடியிருப்புப் பேட்டைகளில் நடத்தப்படுகின்றன.
விஸ்மா கேலாங் சிராயில் தொடங்கியுள்ள சாலைக்காட்சியில் கதைசொல்லும் அங்கங்களும் உள்ளன.
இது குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்கிழக்கு வட்டார மேயர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் கருத்து தெரிவித்தார்.
"இந்தக் கதைசொல்லும் அங்கம் தனிச்சிறப்புமிக்கது. வரலாற்றுக் கண்காட்சிகளை நாம் பொதுவாக எழுத்து வடிவில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அதை மற்றவர் எடுத்துக் கூறும்போது சிங்கப்பூரர்களுக்கு பழைய நினைவுகள் வர வேண்டும் என விரும்புகிறோம்.
"சிங்கப்பூரின் 700 ஆண்டு வரலாற்றையும் தாண்டி சாலைக் காட்சிக்கு வருகை புரிவோருக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்க விரும்புகிறோம்.
"தனிநபரின் பார்வையில் வரலாறு கூறப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்தார்.
சாலைக்காட்சியின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் கலந்துகொண்டார்.
நாட்டின் இறந்தகாலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து, நிகழ்காலத்தைக் கொண்டாடி, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க இந்த இருநூற்றாண்டு நிறைவு சிங்கப்பூரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சாலைக்காட்சியில் வழிகாட்டி களுடனான மரபுடைமைப் பாதைக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதன்வழி கேலாங் சிராய் வட்டாரத்தில் உள்ள முக்கிய இடங்களைப் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!