ஈஸ்வரன்: மெத்தனமாக இருந்துவிடக்கூடாது

ஈஸ்வரன்: மெத்தனமாக இருந்துவிடக்கூடாது

1 mins read
eba9b56e-7dde-47da-b276-c7c140d101a9
-

சிங்கப்பூரில் உள்ள பல்லின, பல சமய மக்களிடையே உறவை வலுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மிகவும் முக்கிய மானவை என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார். இந்த முயற்சிகள் குறித்து மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று அவர் கூறினார். கிளமெண்டி சாலையில் அமைந்துள்ள டென்டரா டி ராஜா பள்ளிவாசலில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் ஈஸ்வரன் கலந்துகொண்டு பேசினார். சமுதாய ஒற்றுமைக்கு சவால்கள் இருந்து வரும் சூழலில் மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்த பல்லின, பல சமய நன்னம்பிக்கை வட்டங்கள் பாடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். "சமூக அளவில் பல்லின, பல சமய நன்னம்பிக்கை வட்டங்கள் மிக முக்கியமாகப் பங்காற்று கின்றன. பல்லின, பல சமய மக்களை ஒன்றிணைத்து அவர்களிடையே புரிந்துணவர்வை அவை வலுப்படுத்துகின்றன. இந்த நல்லறு மிகவும் முக்கியம். அது ஒருமுறை முறிந்தால் அதைத் திரும்ப ஒட்ட வைப்பது மிலவும் சிரமமாகிவிடும்," என்றார் திரு ஈஸ்வரன்.