முன்னோட்டக் காட்சிக்காக திறக்கப்பட்டுள்ள ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. தீச்சம்பவம் ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு நீர் பாய்ச்சும் கருவி ஒன்றில் குறைபாடு இருந்ததே இதற்குக் காரணம். மேல்கூரையிலிருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரைக் காட்டும் காணொளி இணையத் தளத்தில் பகிர்ந்துகொள்ளப் பட்டது. ஈரமாக இருந்த தரையைத் துப்புரவாளர்கள் சுத்தம் செய் வதைக் காட்டும் காணொளியும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நாளை வரை நடத்தப்படும் முன்னோட்டக் காட்சிக்காக வழங்கப்பட்ட இலவச நுழைவுச்சீட்டுகளுக்காக கிட்டத் தட்ட அரை மில்லியன் பேர் பதிவு செய்துள்ளனர். ஜுவல் சாங்கி விமான நிலையம் நாளை மறுநாள் அதிகாரபூர்வமாக திறக்கப் படும். ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஒன்றுக்கு பக்கத்தில் அமைந் துள்ளது. அங்கிருந்து குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ள மின்படிகளைப் பயன்படுத்தி முனையம் இரண்டு, முனையம் மூன்று ஆகியவற்றுக்குச் செல்ல லாம்.
ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் தண்ணீர் கசிவு:
1 mins read

