சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 7.7 டன் குப்பை வீசப்பட்டதாக சுற்றுப்புற, நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார். இது 530,000 ஈரடுக்குப் பேருந்துகளுக்குச் சமம் என்றார் அவர். நீண்டகாலத்தில் இது சிங்கப்பூருக்கு ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர் மசகோஸ், குப்பைகளின் அளவைக் குறைப்பது, நிலைத்திருக்கும் பயனீட்டு முறையை நோக்கிச் செல்வது ஆகியவை மட்டுமின்றி மறுபயனீடு, மறுசுழற்சி அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார். "குப்பைகளை பொக்கிஷமாக மாற்றி முடிந்த வரை நமது வளங்களை மறுபயனீடு செய்வதே எங்களது நோக்கம்," என்று மறுபயனீடு தொடர்பான விளக்கப்படத் திரையிடலின்போது அமைச்சர் மசகோஸ் நேற்று கூறினார். இந்தத் திரையிடலுக்கு கெப்பல் குழுமம் ஏற்பாடு செய்தது. கடந்த 40 ஆண்டு சிங்கப்பூரில் வீசப்படும் குப்பைகளின் அளவு ஏழு மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். 2035ஆம் ஆண்டுக்குள் குப்பைகள் வீசப்படும் புலாவ் செமகாவ்வில் இடம் இருக்காது என்று அவர் வலியுறுத்தினார். குப்பைகளின் அளவைக் குறைக்க பொதுமக்கள் பங்காற்றலாம் என்றார் அமைச்சர். உதாரணத்துக்கு உணவுக் கழிவுகளை செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
'530,000 ஈரடுக்குப் பேருந்துகள் அளவு குப்பைகள்'
1 mins read

