சிங்கப்பூர்-இந்தியா கவச வாகனப் பயிற்சி

சிங்கப்பூர்-இந்தியா கவச வாகனப் பயிற்சி

1 mins read

சிங்கப்பூர் ராணுவமும் இந்திய ராணுவமும் இணைந்து கவச வாகனப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்த இருதரப்பு கவச வாகனப் பயிற்சி நேற்று முன்தினம் நிறைவுற்றது. போல்ட் குருஷேத்ரா என்று பெயரிடப்பட்ட இந்தக் கவச வாகனப் பயிற்சி இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கியது. பயிற்சியில் 270 ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். சிங்கப்பூர் ராணுவமும் இந்திய ராணுவமும் இணைந்து பன்னிரண்டாவது முறையாகக் கவச வாகனப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. பயிற்சியின் ஒரு பகுதி இந்தியாவின் மத்தியப் பகுதியில் நடைபெற்றது. கவச வாகனங்களைச் செலுத்துவது, திட்டமிடுதல், போர் பயிற்சி ஆகியவற்றில் இருதரப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.