ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன் அரேபியத் தீபகற்பத்தில் உள்ள ஏமனிலிருந்து சிங்கப் பூருக்கு வந்த அரபுகளின் வாழ்க்கையில் நடந்தவற்றைக் காட்டும் கண்காட்சி ஒன்றை அரபு நெட்வர்க்@சிங்கப்பூர் நேற்று முன்தினம் திறந்து வைத்தது. இந்த ஏழு நாள் கண்காட்சி தி ஆர்ட்ஸ் ஹவுஸில் அமைக் கப்பட்டுள்ளது. தனி நபர் களிடமிருந்து பெறப்பட்ட புகைப் படங்கள், ஆவணங்கள் ஆகி யவை காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. ஒன்பது இளம் சிங்கப்பூரர் களின் கைவண்ணத்தில் இந்தக் கண்காட்சி உருவாகி உள்ளது. இந்தக் குழுவுக்குப் பட்டப் படிப்பு மாணவரான 34 வயது சயீது முகம்மது ஹஃபிஸ் தலைமை தாங்குகிறார். சமயத் தலைவர்கள், பிரபல வர்த்தகர்கள் ஆகியோரின் கதை களைக் காட்டிலும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை இந்தக் கண்காட்சி காட்டுகிறது. கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் குழுவில் இருக்கும் மற்றவர்கள் 20 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் மாணவர்களும் முழுநேர தேசிய சேவையாளர்களும் அடங்குவர். தங்கள் சொந்தக்காரர்கள், தாத்தா, பாட்டி, ஆகியோரைப் பற்றி அவர்கள் தகவல் சேகரித்து கண்காட்சியில் காட்சிக்கு வைத்துள்ளனர். சொந்தக்காரர்களைப் பற்றிய தகவல்களை மட்டுமின்றி ஏமனிலிருந்து வந்த ஹேட்ராமி அரபுக்களைப் பற்றி அவர்கள் நிறைய தகவல்களைச் சேகரித் துள்ளனர். கண்காட்சியின் திறப்பு விழாவுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அவரது கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷியும் கலந்துகொண் டனர். திறப்பு விழாவின்போது கல்வியில் சிறப்பாக செயல்பட்ட ஒன்பது அரபு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்தக் கண்காட்சி இம்மாதம் 20ஆம் தேதி வரை நடத்தப்படும். கண்காட்சி காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை திறக்கப்படும்.
சிங்கப்பூரின் அரபு சமூகம் பற்றிய புதிய கண்காட்சி
2 mins read
கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் ஆவணங்களையும் பார்வையிடும் அதிபர் ஹலிமா யாக்கோப் (வலமிருந்து இரண்டாவது), அவரது கணவர் முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

