கடைத்தொகுதியில் திடீரென உடைந்த மின்படிக்கட்டுகள்

தெம்பனீஸ் வட்டாரத்தில் மின்படிக்கட்டுகள் நகர்ந்துகொண்டிருந்தபோது கீழ்ப்படிக்கட்டுகள் திடீரென உடைந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

'தெம்பனீஸ் 1' கடைத்தொகுதியிலுள்ள மின்படிக்கட்டுகளில் நான்கு பேர் ஏறிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இரவு 9 மணியளவில் நடந்ததாக ‌'ஷின் மின் நாளிதழ்’ தெரிவித்தது. 

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் கூறியது.  நேற்று கிடைத்த தகவலின்படி மின்படிக்கட்டுகளுக்கான பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது.

சம்பவ இடத்திற்கு போலிசாரும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் செல்லவில்லை என்றது ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’.