புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பட்டியலைப் பொதுமக்கள் பார்வையிடலாம். உறுதி செய்யப்பட்ட வாக்காளர் பதிவுகளில் மொத்தம் 2,594,740 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2,515,322 வாக்காளர் எண்ணிக்கையைவிட 80,000 அதிகம். 

கடந்த தேர்தலில் வாக்களிக்காததால் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டவர்கள் அடுத்துவரும் தேர்தல்களில் வாக்களிக்க மீண்டும் தங்களது பெயரைப் பதிவு செய்யலாம். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேட்பாளர் நியமன நாள் வரை (தேர்தல் போட்டியின்றி முடிந்தால்), அல்லது வாக்களிப்பு தினம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் பதிய முடியாது. 

வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்களும், குறிப்பிடப்பட்ட சில வெளிநாட்டு வாக்களிப்பு நிலையங்களில் இப்போது பதிவு செய்யலாம். 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதிக்கும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்கும் இடையே அவர்கள் சிங்கப்பூரில் குறைந்தது 30 நாட்களில் தங்க வேண்டும். 

பிரின்செப் ஸ்திரீட்டிலுள்ள தேர்தல் துறை அலுவலகத்திலோ அல்லது  https://www.eld.gov.sg/online.html என்ற இணையத்தளத்திலோ வாக்காளர் பட்டியலைப் பார்வையிடலாம். வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்த் தூதரக அலுவலகங்களை நாடலாம்.