கடல்துறை, பதப்படுத்துதல், உற்பத்தித் துறை வெளிநாட்டு ஊழியர்களுக்கும் 'எஸ்ஐபி'

கடல்துறை, பதப்படுத்துதல், உற்பத்தித் துறை வெளிநாட்டு ஊழியர்களுக்கும் 'எஸ்ஐபி'

2 mins read

ஊழியர் நலன், உரிமை, சிங்கப்பூர் சட்டம் ஆகியவை தொடர்பான ஒரு நாள் அறிமுக வகுப்பு (எஸ்ஐபி) சிங்கப்பூரில் முதல் முறையாக வேலை செய்ய வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை தொடர்பாக அவர்கள் அறிந்துக்கொள்ளக்கூடிய அனைத்து தகவல்களையும் தெரி விக்கும். மலேசியர் அல்லாத அனைத்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களும் இந்த வகுப்புக்குச் செல்ல வேண்டும். தற்போது கடல்துறை, பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை செய்ய வரும் புதிய வெளிநாட்டு ஊழியர்களும் இந்த எஸ்ஐபி வகுப்புக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். "சட்டத்திட்டங்கள், அமலாக் கம் ஆகியவற்றைத் தவிர்த்து சிங்கப்பூரில் பணிபுரியும் வெளி நாட்டு ஊழியர்களின் நலனைக் காக்க முக்கிய தகவல்கள் தொடர்ந்து அவசியமாக இருக் கின்றன," என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார். மாதந்தோறும் 1,200 கட்டுமான ஊழியர்கள் இந்த எஸ்ஐபி வகுப்புக்குச் செல்கின்றனர். இந்தத் திட்டம் மற்ற சில துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி வகுப்புக்குச் செல்வோரின் எண்ணிக்கை 1,700க்கு அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபி வகுப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கின. இதுவரை ஏறத்தாழ 5,000 வெளிநாட்டு ஊழியர்கள் எஸ்ஐபி வகுப்புகளுக்குச் சென்றுள்ளனர். இந்த வகுப்புகளுக்கு சென்ற வெளிநாட்டு ஊழியர்களும் அவர்களது முதலாளிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதாக திரு ஸாக்கி கூறினார். தங்கள் ஊழியர்களை எஸ்ஐபி வகுப்புக்கு அனுப்ப முதலாளிகள் ஒவ்வொரு ஊழியருக்கும் $75 செலுத்த வேண்டும். இருப்பினும், 90 விழுக்காடு முதலாளிகள் எஸ்ஐபி வகுப்பு களை வரவேற்றுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டினார்.