ஏமாற்றிப் பணம் பறித்ததாக ஒப்புக்கொண்ட பல்மருத்துவர்

ஏமாற்றிப் பணம் பறித்ததாக ஒப்புக்கொண்ட பல்மருத்துவர்

1 mins read
dde6c961-159e-48ac-916c-8d0fa3b8ebb0
-

மத்திய சேமநிதிக் கழகத்தை ஏமாற்றி தம்மிடம் சிகிச்சைக்கு வந்தோரின் மெடிசேவ் கணக்குகளிலிருந்து பணம் பறித்ததை பல்மருத்துவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். டேனியல் லியூ யாவ்சியாங் 13 பேரின் மெடிசேவ் கணக்குகளிலிருந்து $388,700 பெற்றுக்கொண்டார். இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் மெடிசேவ் கணக்கில் பணம் இல்லாமல் போனதாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தம்மீது சுமத்தப்பட்ட 28 மோசடிக் குற்றச்சாட்டுகளை 'தி ஸ்மைல் டிவிஷன்' பல்மருத்துவக் குழுமத்தில் பணிபுரிந்த லியூ ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கப்படும்போது மேலும் 250 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும். இந்த மோசடியைத் திட்டமிட்டு நடத்திய மற்றொரு பல்மருத்துவரான ஸ்டீவன் ஆங் கியாம் ஹாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியன்று இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அல்ஜுனிட் வட்டாரத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் 37 வயது லியூ பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. $600,000 பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.2019-04-16 06:05:00 +0800