சிங்கப்பூரில் புதிய தனியார் வீடுகள் விற்பனை கடந்த மாதம் அதிகரித்ததாக சொத்து மேம்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் 1,045 தனியார் வீடுகள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட தனியார் வீடுகளைவிட இது 455 குறைவு. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தனியார் வீடு விற்பனை 47 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு தனியார் வீடு விற்பனை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
புதிய தனியார் வீடுகள் விற்பனை கடந்த மாதம் அதிகரிப்பு
1 mins read

