பயங்கரவாதிகளுக்குப் பண ஆதரவு கொடுத்ததாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுக்குப் பண ஆதரவு கொடுத்ததாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

1 mins read

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கை பரப்பு முயற்சிகளுக்குப் பணம் கொடுத்ததாக சிங்கப்பூர் ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை அச்சிட 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று துருக்கியில் இருந்த ஒருவரிடம் தளவாட நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்த 35 வயது இம்ரான் காசிம் $450 கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. "பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் பணம் கொடுப்பது கடுமையான குற்றமாகும். கொடுக்கப்படும் தொகை சிறியதாக இருந்தாலும் அந்தச் செயல் கடுமையான குற்றமாக எடுத்துக்கொள்ளப் படும்," என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள் ளார். வெளிநாடுகளில் ஆயுதம் ஏந்தி சண்டை போட இம்ரானுக்கு நோக்கம் இருந்ததால் அவருக்கு எதிராக தடுப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிரான தடுப்பு ஆணை ரத்து செய்யப்படும். அதையடுத்து, நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.