சாலைச் சந்திப்பில் பெண்மீது மோதிய டாக்சி

கிட்ச்சனர் ரோட்டுக்கும் ஜாலான் பெசாருக்கும் இடையிலான சந்திப்பில் சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்த பெண்மீது ‘கம்ஃபர்ட் டெல்குரோ’ நிறுவனத்தின் டாக்சி ஒன்று மோதியது.

ஞாயிற்றுக்கிழமை காலை இந்தச் சம்பவம் நேர்ந்தது. உதவிக்கான அழைப்பு காலை 9.42 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவத்தை விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். 

விபத்து நடந்தபோது போக்குவரத்து விளக்கு அந்தப் பெண்ணுக்குச் சாதகமாகப் பச்சை நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. அவர் சாலையைக் கடந்துகொண்டிருக்கையில் டாக்சி அவர்மீது மோதியதை ‘ஸ்டாம்ப்’ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி காட்டுகிறது.

மோதப்பட்ட பெண் பாதசாரி மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாக போலிசார் தெரிவித்தனர். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் கடுமையாக இல்லை என்று நம்பப்படுகிறது. போலிஸ் விசாரணைக்கு ‘கம்ஃபர்ட் டெல்குரோ’ உதவி செய்து வருவதாக அதன் தலைமை வர்த்தகத் தொடர்பு அதிகாரி டேமி டான் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்