ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய சுற்றுலாத்தலம்

ஜூரோங் லேக் வட்டாரத்தில் 2026ஆம் ஆண்டுக்குள் புதிய ஒருங்கிணைந்த சுற்றுலாத்தலத் திட்டம் உருவாக்கப்படும்.

ஹோட்டல் ஒன்றுடன் கேளிக்கை இடங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள சுற்றுலாத்தலத்தில் ஆர்வம் தெரிவிக்க சிங்கப்பூர் சுற்றுலாக் கழகம் குத்தகையாளர்களை அழைக்கவிருக்கிறது.

சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் இந்தத் தலம் அமைக்கப்படும். 'ஜூரோங் லேக் கார்டன்ஸ் ஈஸ்ட்' வட்டாரத்தில் உருவாகவுள்ள புதிய அறிவியல் மையம் இதற்குப் பக்கவாட்டில் இருக்கும்.

தனித்தன்மை வாய்ந்த நீர்முகப்பையும் சுற்றுப்புறத்தையும் கொண்டுள்ள இந்த இடம் 2026ஆம் ஆண்டுமுதல் முக்கிய சுற்றுலாத்தலமாகத் திகழும் என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட் சிங்கப்பூர் சுற்றுலாக் கழகத்தின் வருடாந்திர சுற்றுலாத்துறை மாநாட்டின்போது தெரிவித்தார். சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேம்படுத்தும் சுற்றுலாக் கழகத்தின் உத்தியுடன் இந்தப் புதிய திட்டம் ஒத்துப்போவதாக அவர் கூறினார்.

குத்தகையாளர்களுக்கான அழைப்பு நவம்பர் முற்பகுதியில் முடிவடையும் என்று அவர் கூறினார்.

360 ஹெக்டர் பரப்பளவு கொண்ட ஜூரோங் லேக் வட்டாரம் சிங்கப்பூரின் இரண்டாவது மத்திய வர்த்தக வட்டாரமாக மேம்படுத்தப்படவிருக்கிறது. இங்கு அலுவலகங்கள், வீடுகள், தோட்டங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளன.

மேல் விவரங்கள் நாளைய தமிழ் முரசில்...

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!