ஜூரோங் லேக் வட்டாரத்தில் ஏழு ஹெக்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலாத் தளம் கட்டப்படும். இந்தச் சுற்றுலாத் தளம் 2026ஆம் ஆண்டில் திறக்கப் படும். ஜூரோங் லேக் வட்டாரத் துக்கான மேம்பாட்டுத் திட்டத் தில் பங்குபெற ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் அழைப்பு விடுக்க இருக்கிறது. புதிய சுற்றுலாத் தளத்தில் ஹோட்டல், உணவகங்கள், கடைகள், சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள் ஆகியவை இருக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. சைனிஸ் கார்டன் எம்ஆர்டி நிலையத்துக்கும் புதிய அறிவியல் நிலையம் அமைய இருக்கும் இடத்திற்கும் பக்கத்தில் உள்ள நிலத்தில் இந்தப் புதிய சுற்றுலாத் தளம் கட்டப்படும். தற்போது அந்த நிலம் காலியாக உள்ளது. புதிய சுற்றுலாத் தளம் குறித்து சிங்கப்பூர் பயணத் துறைக் கழகத்தின் வருடாந்திர சுற்றுப்பயணத்துறை மாநாட்டில் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் அறிவித்தார். "ஜூரோங் லேக் வட்டாரத் தில் இருக்கும் தனித்தன்மை உள்ள நீர்நிலை சூழலைக் கருத்தில் கொண்டு 2026ஆம் ஆண்டிலிருந்து அங்கு சுற்றுலாத் தளம் ஒன்றை இயக்க நாங்கள் திட்டமிட்டுள் ளோம்," என்றார் திரு சீ. சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் அம்சங்களை அமைக்க கழகம் வியூகம் வகுத்துள்ளது. அதற்கு ஏற்ப ஜூரோங் லேக் வட்டாரத்தில் சுற்றுலாத் தளம் அமைகிறது. 360 ஹெக்டர் பரப்பளவு கொண்ட ஜூரோங் லேக் வட்டாரம் சிங்கப்பூரின் இரண்டாவது மத்திய வர்த்தக வட்டாரமாக உருவெ டுக்கும் என்று கூறப்படுகிறது.
ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய சுற்றுலாத் தளம்
1 mins read
-

