‘மலேசிய ரயில் கட்டமைப்புக்கு முன்னுரிமை’

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரையும் சிங்கப்பூரையும் இணைக்கும் அதிவேக ரயில் சேவை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றார் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது.
ஆனால் தற்போதைய நிலையில் அந்தச் சேவைக்கான தேவை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மாறாக, மலேசியாவின் ரயில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை தரப்படும் என்றார் அவர்.
"அதிவேக ரயில் சேவை சிங்கப்பூருக்கும் கோலாலம் பூருக்கும் இடையே மட்டும் சேவை வழங்கும். அது தற்போது எங்களுக்குத் தேவையில்லை," என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார். சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் சேவையால் ஒரு சில மாநிலங்கள் மட்டும் பலனடையும் என்று டாக்டர் மகாதீர் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டது.
"இப்போதைக்கு அதிவேக ரயில் சேவைக் கட்டமைப்பை நாங்கள் அமைக்கமாட்டோம். மாறாக, எங்கள் நாட்டின் ரயில் கட்ட மைப்பை மேம்படுத்த விரும்பு கிறோம். மின்சாரமயப்படுத்துதல், இரட்டிப்பு தண்டவாளங்கள் போன்ற பணிகள் சிலவற்றை நாங்கள் ஏற்கெனவே செய்து முடித்துவிட்டோம்," என்றார் டாக்டர் மகாதீர்.
அதிவேக ரயில் சேவைக்கான செலவினத்தைக் கருத்தில் கொண்டு அதை ஒத்திவைக்க சிங்கப்பூரிடம் மலேசியா கோரிக்கை விடுத்திருந்தது.
அதிவேக ரயில் சேவையை 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை ஒத்திவைக்க இரு நாடு களும் இணக்கம் கண்டுள்ளன. திட்டத்தை ஒத்திவைப்பதால் ஏற்படும் செலவுக்காக சிங்கப் பூருக்கு மலேசியா $15 மில்லியன் வெள்ளி கொடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!