சட்டவிரோத வாணவேடிக்கை: இளையருக்கு ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு

2 mins read
b0865bf4-a7dd-4c30-a697-3a99c4a9ec95
-

கடந்த ஆண்டு புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் தீபாவளி அன்று சட்டவிரோதமாக வாணவெடிகளை வெடிக்கச் செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 19 வயது ஹரிபிரசாந்த்துக்கு (படம்) எதிராக நேற்று ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணை பிறப்பிக்கப் பட்டது. அத்துடன் ஹரிபிரசாந்த்தின் நன்னடத்தையை உறுதிசெய்ய அவரின் பெற்றோருக்கு $5,000க் கான பிணைக் கையெழுத்து போடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டது. இதே குற்றத்திற்காக ஹரி பிரசாந்த்தின் தந்தை அழகப்பன் சிங்காரத்திற்குச் சென்ற மாதம் $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவர் ஆபத்துமிக்க வாண வேடிக்கை சட்டத்தின்கீழ் குற்ற வாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது நபர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வட்டாரத்தில் தம்முடைய தந்தை 54 வயது அழகப்பனுடன் சேர்ந்து ஹரிபிரசாந்த் வாணவெடிகளை வெடிக்கச் செய்தார். தீபாவளிக்காக அலங்காரப் பொருட்கள் வாங்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று ஜோகூர் பாருவுக்குச் சென்றபோது இருவரும் '25 ஷாட் கேக்' வகை வாணவெடி களை வாங்கினர். கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி இரவு 7.40 மணியளவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள புளோக் 194Bயின் தரைத்தளத்திலிருந்து வாணவெடிகளை தந்தையும் மகனும் வெடிக்கச் செய்தனர். தொடர்ச்சியாக 25 ராக்கெட் வாணவெடிகள் கிட்டத்தட்ட ஒன் பது முதல் பத்து மாடி உயரம் வரை பாய்ந்து சென்று வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவ்வட்டாரத்தின் குடியிருப்பாளர் கள் பதற்றம் அடைந்ததாகக் கூறப் பட்டது. இருப்பினும், இச்சம்பவத் தில் யாரும் காயமடையவில்லை. அத்துடன் பொருட்கள் ஏதும் சேதம் அடையவில்லை. விசாரணை மேற்கொண்ட போலிசார் துப்புரவாளராகப் பணி புரியும் அழகப்பன் சிங்காரமும் அவரின் மகனும் வாணவெடியை வெடிக்கச் செய்ததைக் கண்டு பிடித்தனர். சட்டவிரோதமாக வாண வெடியை வெடிக்கச் செய்த குற் றத்தைத் தேசிய சேவை செல் வதற்காகக் காத்துக்கொண்டிருக் கும் ஹரிபிரசாந்த் சென்ற மாதம் ஒப்புக்கொண்டார்.