வேலைகளை மேம்படுத்துவதில் மனிதவள அமைச்சு கவனம்

சிங்கப்பூரர்களில் பெரும்பாலா னோர் தங்களின் வயதான பருவத் தின் பெரும்பகுதியில், தாங்கள் கல்விக்காக செலவழித்த ஆண்டு களைக் காட்டிலும் பன்மடங்கு அதிக ஆண்டுகள் வேலை பார்க்க விரும்புகின்றனர். 
இதனால், மாணவர்களுக்கு  தங்கள் கல்விப் பாதையை தேர்ந்தெடுக்க எப்படிப் பல வழிகள் உள்ளனவோ, அது போலவே வேலை பார்ப்போர் தங்கள் வேலையில் முன்னேறிச் செல் வதும் முக்கியம் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நடைபெற்ற மனிதவள அமைச்சின் பணித்திட்டக் கருத் தரங்கில் கூறினார்.
சிங்கப்பூரர்கள் எந்த நிலையில் வேலை பார்க்கத் தொடங்கினாலும், அவர்கள் தங்கள் வேலைகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும் ‘அடெப்ட் அண்ட் குரோ’ என்ற மாற்றி அமைத்துக் கொண்டு வளர்ச்சியடையும் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த முன்னேற்றத்தை தங்கள் சொந்த முயற்சியுடனும் முதலாளி கள், அரசாங்கம் ஆகியோரின் உதவியுடனும் அவர்கள் அடை வதே அரசின் நோக்கம் என்று அவர் விளக்கினார்.
“பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கல்வியுடன் வளர்ச்சி காணும் வாய்ப்புகளையும் எதிர்பார்க் கின்றனர். எவரும் ஒரே நிலையில் காலம் முழுவதும் இருக்க விரும்பு வதில்லை. வாழ்க்கைத் தொழிலில் முன்னேற்றம் காண விரும்பும் இந்த வேட்கை சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்ற விருப் பத்தைப் போன்றது,” என்று மனித வள அமைச்சு, ஆணைபெற்ற கழ கங்கள், தொழிற்சங்கங்கள் ஆகி யவற்றைச் சேர்ந்தோர் கூடியிருந்த கருத்தரங்கில் அமைச்சர் கூறி னார். ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் இவ்வாறு பேசிய அமைச்சர், இத னால் மூவகை ஊழியர்கள் எவ் வாறு பாதிக்கப்படுகின்றனர் என் பதையும் விளக்கினார்.
முதலாவதாக, பெருகிவரும் முதிய ஊழியர்களுக்கு வாழ்க் கைத் தொழில் மேம்பாடு என்பது அவர்கள் தங்கள் ஓய்வுக்கால சேமிப்பை பெருக்கிக் கொள்வதற் காக, தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று எண்ணும் பட் சத்தில், அதற்கான வாய்ப்பைப் பெறுவது. இதில் அவர்கள் தங் களுக்கான பணிச்சுமை முன்போல் கடுமையாக இல்லாமலும் புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டி வரும்பொழுது உதவியையும் எதிர் பார்க்கின்றனர் என்றார் அமைச்சர்.
இதில், முதிய ஊழியர்கள் தொடர்பான முத்தரப்புப் பங்காளித் துவப் பணிக்குழு, ஓய்வுபெறும் வயது, மறுவேலை பார்க்கும் வயது, ஆகியவற்றை உயர்த்துவது, அவர்களுக்கான மத்திய சேம நிதிச் சந்தா விகிதம் போன்றவை குறித்து தனது பரிந்துரைகளை முன்வைக்கும்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon