மரினா பே விபத்து; நால்வர் காயம், ஓட்டுநர் கைது

மரினா பே விபத்து; நால்வர் காயம், ஓட்டுநர் கைது

1 mins read
87f82f8d-2fd5-4b15-95ab-01e542993d88
கார் ஒன்று நடைபாதை மீதிருந்த உலோகத் தூண்மீது மோதியதில் நால்வருக்குக் காயம் ஏற்பட்டது. படம்: சாவ்பாவ் -

மரினா பே நிதிமையத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தின் போது நடைபாதையில் இருந்த ஓர் உலோகத் தூண் மீது கார் மோதியதில் நால்வர் காயமடைந் தனர். இச்சம்பவம் தொடர்பில் 25 வயது கார் ஓட்டுநர் கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டிய தன் தொடர்பில் கைது செய்யப் பட்டுள்ளார். சென்ட்ரல் பொலிவார்ட், மரினா வே ஆகியவற்றின் சாலைச் சந்திப்பில் விபத்து நேர்ந்ததாக போலிசாருக்கு மாலை 6.08 மணிக்கு தகவல் கிடைத்தது. மூன்று பெண் பாதசாரிகளும் காரில் பயணியாக இருந்த ஓர் ஆடவரும் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட் டனர். அவர்களில் ஒருவரது காயங்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்டதாகக் கூறப்பட்டது. சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.

கார் ஒன்று நடைபாதை மீதிருந்த உலோகத் தூண்மீது மோதியதில் நால்வருக்குக் காயம் ஏற்பட்டது. படம்: சாவ்பாவ்