தாதிமை இல்லத்தில் உணவு விநியோகம் செய்யும் இயந்திரம்

தானியங்கி இயந்திரம் வழி பீஸ்ஹேவன் தாதிமை இல்லத்தில் உணவு விநியோகம் செய்யப்படுவ தால் நேரமும் பணமும் மிச்சம் ஆகிறது.
'த சல்வேஷன் ஆர்மி'க்கு சொந்தமான இத்தாதிமை இல்லத் தில் கிட்டத்தட்ட 380 இல்லவாசி களும் 180 பகல்நேர நிலைய உறுப்பினர்களும் உள்ளனர்.
இவர்களுக்கான உணவை இல்ல ஊழியர்கள் சமையலறை யிலிருந்து எடுத்துக்கொண்டு கனரக தள்ளுவண்டிகளில் சீரற்ற தரைமேல் தள்ளிக்கொண்டு மூன்று மாடி ஏறி இறங்கக் கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் எடுக் கும். இது இல்ல ஊழியர்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருந்து வந் தது.
இதைச் சமாளிக்க ஓர் ஆண்டுக்கு முன் இரண்டு தானியங்கி இயந்திரங்களை இல்லம் வாங்கியது. இதனால் உணவைப் பாதுகாப்பாக விநி யோகம் செய்ய முடிவதுடன் அனைவருக்கும் எளிதான ஒன் றாகவும் அமைந்தது.
இல்லவாசிகளுடன் இதனால் கூடுதல் நேரத்தைச் செலவழிக்க முடிவதாக இல்லத்தின் மூத்த தலைமைத் தாதி திருவாட்டி தாமஸ் ஜீனா கூறினார்.
இதற்குமுன் சமையலறைப் பணிகளுக்கென வெளியாட்கள் நியமிக்கப்பட்டனர். இயந்திரங் களைப் பயன்படுத்தத் தொடங் கியதிலிருந்து வெளியாட்களுக்குத் தரப்பட்ட ஏறத்தாழ $12,000 சம் பளப் பணம் மிச்சமாவதாகக் கூறப் பட்டது. சென்சார்கள், முப்பரிமாண கேமராக்கள் ஆகியவற்றைக் கொண்டமைந்த இயந்திரங்கள் கம்பியில்லா கட்டுப்பாட்டுக் கருவி யால் இயக்கப்படுகிறது.
ஓராண்டு முன்னோட்டச் சோதனைக்குப் பின் அதிகாரத்துவ மாக இச்சாதனங்களைப் பயன் படுத்தும் திட்டம் நேற்று நடப்புக்கு வந்தது. தாதிமை இல்லங்களில் தானியக்கத்தையும் தொழில்நுட்பத் தையும் பயன்படுத்த ஊக்குவிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதி இது.
வாரம் ஒருமுறை பொருட்களை விநியோகம் செய்யவும் இயந் திரங்கள் பயன்படுத்தப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!