திறந்தன ஜுவலின் கதவுகள்

ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்கு இப்போது எல்லா வருகையாளர்களும் பயணிகளும் செல்லலாம். புதன்கிழமை (ஏப்ரல் 17) காலை 10 மணிக்குள் புதிய விமான நிலையப் பயணப்பதிவு முகப்புகள் 26 பயணிகளின் பயணப்பதிவைப் பரிசீலித்து முடித்திருந்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. மொத்தம் 26 விமான நிறுவனங்கள் ஜுவலில் பயணப்பதிவுகளை முன்கூட்டியே வழங்குகின்றன.

280க்கும் அதிகமான கடைகளையும் உணவகங்களையும் கொண்ட ஜுவல், சாங்கி விமான நிலையத்தின் அத்தனை விமான முனையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

ஜுவல் வளாகம் 1.7 பில்லியன் வெள்ளி செலவில் நான்கு ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை முதன்முதலாகப் பிரதமர் லீ சியன் லூங் 2013ஆம் ஆண்டின் தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார். ஜுவல் சாங்கியால் சிங்கப்பூர் உயர்தர விமான மையமாகத் திகழும் என்று அவர் கூறினார்.