கெப்பல் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் மூத்த கொள்முதல் அதிகாரியாக முன்பு பணியாற்றிய நியோ கியன் சியோங் எனும் 63 வயது ஆடவர் 2007 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் $740,000க்கும் அதிகமான தொகையை லஞ்சம் பெற்றதற்காக அவருக்கு ஓராண்டு மற்றும் 9 மாத சிறைத் தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. மூலப் பொருட்கள் வாங்குவதற்கான விலைப்புள்ளி கோரப்படும்போது, அதைச் சமர்ப்பிப்பதற்கான இறு திக் கட்டத்தில் மற்ற போட்டி நிறு வனங்களின் விலைப்புள்ளி விவ ரங்களை சில நிறுவனங்களுக்கு நியோ தெரிவித்து வந்ததாகக் கூறப்பட்டது. அதன் மூலம் சில நிறுவனங்கள் குறைவான விலைப் புள்ளியைச் சமர்ப்பித்து பணி ஆணையப் பெற முடிந்தது. ஊழல் தொடர்பான 26 குற்றச்சாட்டுகளையும் தவறான வழியில் பெற்ற லாபத்தால் பயனடைந்ததன் தொடர்பில் 28 குற்றச்சாட்டுகளையும் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அவர் ஒப்புக்கொண்டார். அதுபோன்ற மேலும் 341 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில்கொள் ளப்பட்டன.
லஞ்சம் பெற்றவருக்கு 21 மாதச் சிறை
1 mins read
நியோ கியன் சியோங் -

