இரண்டு நாட்களாக மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் $45,000 மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியதாகவும் அதன் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரி வின் நேற்றைய அறிக்கை தெரி வித்தது. போதைப்பொருள் கடத்துபவர் என்று சந்தேகிக் கப்பட்ட 38 வயது சிங்கப்பூரர் உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட தாகக் கூறப்பட்டது. அவர் வீசியெறிந்த பையில் இருந்த 276 கிராம் எடையுள்ள 'ஐஸ்' எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வீட்டிலும் போதைப்பொருள் சிக்கியது. அந்த நபரைச் சந்தித்ததாக நம்பப்படும் 31 வயது மலேசிய ஆடவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.
சுமார் $45,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது; நால்வர் கைது
1 mins read

