மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பிளாஸ்டிக் துண்டு

மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பிளாஸ்டிக் துண்டு

1 mins read
9dd9299d-e38f-4321-89fd-95db4bcc7456
-

மெக்டொனால்ட்ஸ் ஜூரோங் பௌல் கடையில் கடந்த வாரம் $12.65 செலுத்தி வாங்கிய 'கிளாசிக் ஆங்கஸ் சீஸ் பர்கரை' சாப்பிட்டபோது அதில் பிளாஸ்டிக் துண்டு ஒன்று இருந்ததாக வாடிக் கையாளர் கிரிஸ்டஃபர் கோ, 46, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் நேற்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வாந்தி எடுத்த அவர், ஜூரோங் பலதுறை மருந்தகத்தில் மறுநாள் சிகிச்சை பெற்றதாகவும் அவருக்கு இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்ட தாகவும் குறிப்பிட்டார். அதனை அடுத்து, திரு கோ போலிசில் புகார் செய்தார். புகார் அளிக்கப் பட்டதை போலிஸ் தரப்பு உறுதி செய்தது. கடந்த திங்கட்கிழமை மாலை 6.25 மணியளவில் 1 யுவான் சிங் ரோட்டில் இருக்கும் கடையில் அந்த பர்கரை திரு கோ வாங்கிய தாகக் கூறப்பட்டது. வாயில் அகப்பட்ட பிளாஸ்டிக் துண்டு மிகவும் பெரியது எனவும் அது பர்கரில் முழுமையாக உருகியிருந் தது என்றும் அவர் குறிப்பிட்டார். திரு கோவின் பணத்தை அவரிடம் திருப்பிச் செலுத்திய கடை, அவருக்கு புதிய பர்கர் ஒன்றை வழங்கியது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் வாடிக்கை யாளருடன் பேசி வருவதாகக் கூறிய மெக்டொனால்ட்ஸ் நிறு வனப் பேச்சாளர், "எங்களது தர உறுதிப்பாட்டுக் குழு உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளது," என்று கூறினார்.