மூளையிலிருந்து கட்டி ஒன்றை அகற்றுவகற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு நிரந்தமாக கோமா நிலையை அடைந்துள்ள 68 வயதான திருவாட்டி குவான் சின்னின் சார்பில் அவரது மகள்களில் ஒருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, அதன் ஆக மூத்த நரம்பியல் நிபுணர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். சிகிச்சையில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ள அதில் $2.5 மில்லியன் இழப்பீடு கோரப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் நாள் விசாரணையில், திருவாட்டி குவானின் சிகிச்சையில் மருத்துவர் எடுத்த முடிவு தவறானது என்பதை நிபுணர்கள் மூலம் உறுதிப் படுத்த முடியும் என வாதியின் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
மூளையில் கட்டியை அகற்றிய வழக்கு; விசாரணை தொடக்கம்
1 mins read

