தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்றுனராக இருந்து மாய வித் தைக்காரராக மாறிய 38 வயது எஸ் சந்திரன், தமக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்க இருந்த நாளில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். உற்பத்தித் திறன், புத்தாக்கப் பற்றுத் திட்டத்தின் (பிஐசி) வழி யாக $1.1 மில்லியன் மோசடியில் அவருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. அந்தக் குற்றச் சாட்டை முன்பு ஒப்புக்கொண்ட அவர், தமது முந்தைய குற்ற ஒப்புதலை நேற்று மீட்டுக்கொள்ள அனுமதி கோரினார். நீதிபதி அதற்கு அனுமதி வழங்கினார். தன் தரப்பில் வாதாட வழக் கறிஞர் யாரையும் நியமிக்காத சந்திரன், தற்போது மன நலக் கழகத்தில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். ஆனால், அவரது நிலை பற்றிய விவரம் ஏதும் தெரிவிக்கவில்லை. சந்திரனின் கோரிக்கையை நீதிபதி கெஸ்லெர் சோ ஏற்றுக் கொண்டதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஐசி திட்டத்தின் கீழ் 2013ஆம் ஆண்டு ஜூன் முதல் 2014ஆம் ஆண்டு ஜூலை வரை யிலான காலத்தில் 49 பேருக்கு மோசடியாக பணம் பெறும் கோரிக் கைகளைச் சமர்ப்பிக்க உதவிய தாகக் கடந்த ஆண்டு 23ஆம் தேதி சந்திரன் ஒப்புக்கொண்டிருந் தார். மேலும், $400,000 தொடர் பிலான வருமான வரிச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டிருந்த 18 குற்றச் சாட்டுகளையும் அப்போது அவர் ஒப்புக்கொண்டார். தீர்ப்பின்போது மேலும் 40 குற்றச்சாட்டுகள் கணக்கில் கொள்ளப்படவிருந்தன.
தமது குற்ற ஒப்புதலை மீட்டுக்கொண்ட சந்திரன்
1 mins read

