சுடச் சுடச் செய்திகள்

‘சிஓஇ’ எண்ணிக்கை 3.5% குறையும்

மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கார்களுக்கு வழங்கப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் (‘சிஓஇ’) எண்ணிக்கை 9.5 விழுக்காடு குறைந்து மாதத்திற்கு 5,875 ஆக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருக்கிறது. சில மோட்டார் நிறுவனங்கள் எதிர்பார்த்த 20 விழுக்காட்டுச் சரிவைவிட இது வெகு குறைவு.

அனைத்து வாகனங்களுக்கும்  மாதந்தோறும் விநியோகிக்கப்படும் ‘சிஓஇ’ சான்றிதழ்களின் சராசரி எண்ணிக்கை 8,448 ஆக இருக்கும். இது, தற்போதைய ஒதுக்கீட்டைவிட 3.5 விழுக்காடு குறைவு.

1,600 சிசி வரையிலான சிறிய கார்களுக்கு மாதத்திற்கு 2,848 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இது தற்போது கொடுக்கப்படும் சான்றிதழ்களைவிட 13.7% குறைவு. 1,600 சிசி-யைவிடப் பெரிய கார்களுக்கு 5 விழுக்காடு குறைவாக மாதத்திற்கு 2,278 சான்றிதழ்கள் வழங்கப்படும். 

பொதுப்பிரிவுக்கு மாதத்திற்கு 749 சான்றிதழ்களும், வர்த்தகப் பிரிவுக்கு 779 சான்றிதழ்களும், மோட்டார் சைக்கிள் பிரிவுக்கு  1,794 சான்றிதழ்களும் வழங்கப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon