எட்டு வயது ஆகப் போகும் ஹார்ன்பில் பறவை

எட்டு வயது ஆகப் போகும் ஹார்ன்பில் பறவை

1 mins read
088dbfb0-9cd7-4f32-8dd7-358a4eda8671
-

ஜூரோங் பறவை பூங்காவைச் சேர்ந்த பிரபல ஹார்ன்பில் பறவையான 'சன்னி'க்கு இன்னும் இரண்டு நாட்களில் எட்டு வயது ஆகப் போகிறது.

2011ஆம் ஆண்டில் பிறந்த சன்னி, ஜூரோங் பறவைப் பூங்காவின் சின்னமாக 2016ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அருகிவரும் இனப் பறவையான ஹார்ன்பில்லின் அலகுகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'சன்னி' பூங்காவின் சின்னமாக உறுதி செய்யப்பட்டது.

இந்தப் பறவைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தும் நேரத்தில் பறவையின் பிறந்தநாள் வருவதாகச் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்தது.