புத்தாக்கமும் தொழில்நுட்ப நுண்ணறிவும் முக்கியம்

புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத் தையும் சிங்கப்பூர் நிறுவனங்கள் கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும், மாற்றத்தை விரைவில் ஏற்றுக்கொள்ள வேண்டும், இவற் றால் ஊழியர்கள் யாரும் பின்தங்கி விட அனுமதிக்கூடாது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான் சிஸ்கோ நகரில் நடைபெறும் இரண்டு நாள் பிரிட்ஜ் கருத்தரங் கின் தலைமை நிர்வாகி உச்ச நிலைக் கூட்டத்தில் திரு ஹெங் பேசினார்.
சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சார்ந்த நிறுவனங்களின் படைப்பு களைப் பார்வையிட்ட பிறகு, "தொழில்முனைப்பும் புத்தாக்கத் திறனும் தம்மை வியக்க வைத்துள் ளதாகக் கூறிய அமைச்சர், "மாற் றங்களுக்கு ஏற்ப தங்களை விரை வில் மாற்றிக்கொள்ளும் நிறுவனங் கள் சிங்கப்பூரில் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களைப் பாதிக் கக்கூடாது," என்று சுமார் 200 பார்வையாளர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலில் திரு ஹெங் குடன் பங்கேற்ற 'செக்கோயா கேப்பிட்டல்' நிறுவனத்தின் நிர்வா கப் பங்காளி திரு டாக் லியோன், சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில் முனைவர்களிடம் காணப்படும் முக்கிய திறன்களை சிங்கப்பூர் பயன்படுத்திக்கொள்ளலாம் என் றார்.
திறனாளர்களை ஈர்க்கும் அதே வேளையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பான பட்டதாரிகளைப் பெருக்கிக்கொள்ளலாம் என்றும் திரு வியோன் ஆலோசனை கூறி னார்.
இந்தக் கலந்துரையாடலை சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங் வழி நடத்தி னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!