‘தெம்பனிஸ் மால்’ உணவுச் சந்தையில் தீ மூண்டது

தெம்பனிஸ் மால் கடைத் தொகுதியில் உள்ள உணவுச் சந்தையில் நேற்று பிற்பகல் தீ மூண்டதால், அந்தக் கடைத்தொகுதி தற்காலி கமாக மூடப்பட்டது.
டுவிட்டரில் வெளியான புகைப்படங்களில், மின்படிக் கட்டுகளுக்குப் பக்கத்தில் தீப் பிழம்புகள் தென்பட்டன.
அங்குள்ள வாடிக்கை யாளர்கள் பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர்.
தெம்பனிஸ் மால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கடைத்தொகுதியின் நடுப் பகுதியில் சிறிய தீ மூண்டது என்று குறிப்பிட்டது.
"தீ அணைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு கருதி கடைத் தொகுதி தற்காலிக மாக மூடப்பட்டுள்ளது," என் றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தாம் கடைத்தொகுதியின் முதல் மாடியில் இருந்தபோது பாதுகாவல் அதிகாரியால் அங்கி ருந்து சென்றுவிடும்படி ஆலோ சனை கூறப்பட்டது என்று வாடிக் கையாளர் ஒருவர் தெரிவித்தார்.
"கருகும் வாடை எங்கும் பர வியிருந்தது. கடைத்தொகுதியில் உள்ள அனைவரும் வெளியேற்றப் பட்டனர். அனைவரும் அமைதி யாக இருந்தார்கள்.
"கடைத்தொகுதிக்கு வெளி யில் நான்குக்கும் மேற்பட்ட போலிஸ் வாகனங்களும் இரு ஆம்புலென்சுகளும், ஒரு தீயணைப்பு வண்டியும் இருந் தன," என்றும் அந்த வாடிக்கை யாளர் கூறினார்.
முதல் தளத்தில் இருந்த ஒரு ஜப்பானிய உணவுக் கடையில் தீ மூண்டது. கடைத்தொகுதி நேற்று இரவு 7 மணிக்கு மீண் டும் திறக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!