சுடச் சுடச் செய்திகள்

சாலைத் தடையில் மோதி கிராப் ஓட்டுநரின் கை எலும்புகள் முறிவு

சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்சில் குறியிடப்படாமல் வைக்கப்பட்டி ருந்த சாலைத் தடையில் மோதிய தால் கிராப் உணவு விநியோக ஓட்டுநர் ஒருவரின் வலது கை எலும்புகள் முறிந்தன.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணிக்கு நிகழ்ந்தது. 29 வயது முகம்மது இஸ்கந்தர் ஷா தனது உணவு விநியோகத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பாதசாரிகள் சாலை யைக் கடக்கும் இடத்தில் இருந்த குறியிடப்படாத சாலைத் தடையில் இஸ்கந்தர் மோதினார். சாலைத் தடையும் சாலை மேடையும் ஒரே வண்ணத்தில் இருந்ததால், தனது மின்ஸ்கூட்டரின் முன்விளக்கின் ஒளியாலும் அதை வேறுபடுத்திக் காட்ட முடியவில்லை என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித் தார்.
விபத்து நடந்தபோது அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் சென்றாலும் மோதலின் தாக்கம் அவரை தலைகுப்புற விழ வைத்தது என்றும் இஸ்கந்தர் விவரித்தார்.
விழும்போது தனது வலது கையைக் கொண்டு தாங்க முயன்றாலும், அதில் பலன் இல்லை என்றும் தரையிலிருந்து எழ முயன்றபோது கையில் கடு மையான வலி இருந்தது என்றும் அவர் சொன்னார்.
கையின் பக்கவாட்டின் ஒரு பகுதியில் வீக்கம் தென்பட்டது. அது உண்மையில் வீக்கம் அல்ல என்றும் முறிந்தபோன எலும்பு கையின் மேற்பகுதியைத் தொட் டுக்கொண்டு இருந்தது என்றும் பின்னர் இஸ்கந்தர் அறிந்தார்.
தனது உறவினரான திரு இண்ட்ரா ரெஸானைத் தொடர்பு கொண்டார் இஸ்கந்தர். அவர் வந்து இஸ்கந்தரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இஸ்கந்தருக்கு 36 நாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட் டது. அவர் கிராப் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் வேலை செய்து வந்தாலும், இவ்விபத்து அவரது எதிர்கால வருமானத் துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon