விமானப் போக்குவரத்து ஆய்வுக்  கழகம் அமைய உடன்பாடு

சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்து நிர்வாகத் துறையில் ஆய்வு உருவாக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உடன்பாடு ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் கையெ ழுத்திட்டு இருக்கும் அந்த உடன்பாட்டின்படி விமானப் போக்குவரத்து ஆய்வுக் கழகம் ஒன்று தோற்று விக்கப்படும்.
கட்டமைப்பு ஆற்றல், விமானத்திடல் நிர்வாகம் மற்றும் செலவு, விமான நிலைய இணைப்பு ஆற்றல், தகவல் பகிர்வு மற்றும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுத்தல் ஆகிய நான்கு துறைகளில் புதிய கழகம் ஆய்வுகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  
அந்தப் புதிய  கழகம், இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்து இருக்கும். விமானப் போக்குவரத்து செயல்முறைகள், கட்டணம், கொள்கை ஆய்வு ஆகியவற் றில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தும் வகையில் அமை கின்ற முதலாவது விமானப் போக்குவரத்து நிர்வாக ஆய்வு உருவாக்க நிலையமாக புதிய கழகம் இருக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் புதிய கழகம் மேற்கொள்ளக்கூடிய விமானப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாக கொள்கை ஆய்வுகளுக்காக $11.6 மில்லியன் தொகையை இந்த ஆணையம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon