இவ்வாண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) விநியோகம் ஒரு மாதத்துக்கு 9.5% அதாவது 5,875 சான்றிதழ்கள் குறைக்கப்படலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று இது பற்றி அறிவித்த ஆணையம், அனைத்து வாகனங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் ஒரு மாதத்துக்கு 8,448 சான்றிதழ்கள் கொடுக்கப்படும். இது தற்போதைய ஒதுக்கீட்டைக் காட்டிலும் 3.5% குறைவு. 1,600 சிசிக்கு உட்பட்ட கார்களுக்கான சான்றிதழ் 2,848க்குக் குறையும். இது தற்போதைய விகிதத்தைவிட 13.7% குறைவு. 1,600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான சான்றிதழ் 5% குறைந்து மாதத்துக்கு 2,278 சான்றிதழ்கள் வழங்கப்படும். வர்த்தக வாகனங்களுக்கான 'சிஓஇ' சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28.1% அதிகமாக அதாவது 779 சான்றிதழ்கள் கூடுதலாகப் பெறுவார்கள். மோட்டார் சைக்கிள்களுக்கான சான்றிதழ் 8.7% அதிகரித்து, 1,794 சான்றிதழ்களாகும்.
மே முதல் ஜூலை மாதம் வரை 'சிஓஇ' சான்றிதழ் 3.5% குறைக்கப்படுகிறது
1 mins read

