இசை நிகழ்ச்சிகள் டிக்கெட்டுகள் மோசடியில் ஈடுபட்ட இளையர் கைது

இசை நிகழ்ச்சிகள் டிக்கெட்டுகள் மோசடியில் ஈடுபட்ட இளையர் கைது

1 mins read

'எட் ‌ஷீரன்', 'மரூன் 5', 'பிளாக்பிரிண்ட்' ஆகிய இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பில் இணைய வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 18 வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிகளுக்குரிய டிக்கெட்டுகளை வாங் குவதற்கு ரசிகர்கள் 'கரோசல்' இணையத்தளத்துக்குச் சென்றனர். ஆனால், டிக்கெட்டுகளுக்கான பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்திய பிறகும் டிக்கெட்டுகள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2ஆம் தேதி வரை ஏமாற்றப்பட்டவர்களிடமிருந்து போலிசுக்கு புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகள் அந்த இளையரைக் கைது செய்தனர். அவர் மோசடி செய்து பெற்ற தொகை $5,400. அந்த இளையர் மற்றவர்களை ஏமாற்றியதற்காக நீதிமன் றத்தில் குற்றம் சாட்டப்படுவார். இளையரின் குற்றம் நிரூபிக் கப்பட்டால் அவருக்கு பத்தாண்டு வரை சிறையும் அபராத மும் விதிக்கப்படலாம்.