சிங்கப்பூர் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிலை பராமரிப்புப் பணிகளுக்காக வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மூடப்படும் என சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. திரு ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் முதன்முதலாக காலடி பதித்த அந்தப் பகுதி சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. அதில் புகைப்படம் எடுத்துக்கொள்ள மேற்கூறிய மூன்று நாட்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பராமரிப்புக்காக மூடப்படும் ராஃபிள்ஸ் சிலை
1 mins read

