சுடச் சுடச் செய்திகள்

சோற்றுக் கட்டுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த மின்-சிகரெட் கருவி

சோறு வைக்கப்பட்டிருந்த பொட்டலம் ஒன்றில் மின் சிகரெட்டுகளைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் சாதனம் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்  தெரிவித்துள்ளது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இது கண்டுபிடிக்கப்பட்டது.
பார்ப்பதற்கு சாறு அடங்கிய புட்டிகள் போன்று இருந்தாலும் அவற்றில் இருந்தது புகையிலையில் காணப்படும் ‘நிக்கோட்டின்’ திரவம் என்று ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியது. மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்றின் பொருள் வைக்கும் பெட்டிக்குள் அந்தப் பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது. “மோட்டார்சைக்கிளின் பையில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் சோதனையின்போது, மின் சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் இருந்தது கண்டறியப்பட்டது,” என்று கூறிய ஆணையம், கூடுதல் விசாரணையை சுகாதார அறிவியல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது. சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்தப்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பு சோதனைகள் தொடரும் என்றும் ஆணையம் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon