‘மருத்துவர் பரிந்துரைத்த உணவுமுறை உடனடியாகப் பின்பற்றப்படவில்லை; தொடர்ச்சியாக இருமி மயங்கினார், மாண்டார்’

சைமன் லீ, 67, என்பவரின் மூன்று பற்களை அகற்றிய பல் மருத்துவர் பெர்ட்ராண்ட் சியூ, திரு லீக்கு மென்மை யான உணவு வகைகளை அளிக்கு மாறு அறிவுறுத்தி இருந்தார். திரு லீ சிகிச்சை பெற்றுவந்த இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் அவருக்கு பரிந்துரைக் கப்பட்ட உணவுமுறை உடனடியாகப் பின்பற்றப்படாமல், பொதுவான உணவே வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி தொடர்ந்து இருமிய அவர், மயங்கினார், பின்னர் மரண மடைந்தார்.
திரு சைமன் லீயின் மரணம் துரதிருஷ்டவசமானது என்று மரண விசாரணை அதிகாரி மார்வின் பே நேற்று முன்தினம் கூறினார். திரு லீக்கு மருத்துவர் பரிந்துரைத்த உணவுமுறை உட னடியாகப் பின்பற்றாதது கவலைக் குரிய அம்சம் என்றாரவர்.
மூன்று பற்கள் அகற்றப்பட்ட நிலையில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வகையில் இருந்த திரு லீக்கு தொண்டையில் சிக்கும் அபாயம் அதிகம் இருப்பதைக் கவனத்தில் கொண்டு அவரை முறையாகக் கண்காணித்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
ஆனால், தற்போது இருக்கும் தகவல்களின்படி, மென்மையான உணவு முறையைப் பின்பற்றாதது மட்டுமே அவரது மரணத்துக்குக் காரணம் என்று முடிவாகக் கூறிவிட முடியாது என்று கூறிய திரு பே, அவருக்கு ஏற்கெனவே பக்கவாதம், இதயப் பிரச்சினை, நீடித்திருக்கக்கூடிய இருமல் பிரச்சினை போன்றவை இருந்ததை யும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி திரு லீக்கு கிருமித் தொற்று காரணமாக சீழ்பிடித் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாயின் சுகாதாரக் குறைவு கார ணமாக அது நிகழ்ந்திருக்கலாம் என்பதால் அம்மாதம் 16ஆம் தேதி அவரது இடது மேல்தாடையில் இருந்து மூன்று பற்கள் அகற்றப் பட்டன. 16, 17 தேதிகளில் பொதுவான உணவுமுறையைப் பின்பற்றி அவருக்கு உணவு வகைகள் வழங்கப்பட்டன.
திரு லீயின் மரணத்துக்குப் பிறகு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை பல நடவடிக்கை களை எடுத்திருப்பதாக அதிகாரி பே குறிப்பிட்டார். மருத்துவர் வழங் கும் குறிப்புகள் அல்லது ஆணை களை உடனடியாக நடைமுறைப் படுத்துவதை உறுதிசெய்யும் நோக்கில் மருத்துவர் - நோயாளி விகிதம் மேம்படுத்தப்பட்டது.
திரு சைமன் லீயின் குடும்பத் தாருக்கு ஆழ்ந்த அனுதாபங் களைத் தெரிவிப்பதாக மருத்துவ மனை அறிக்கை தெரிவித்தது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்கும் நோக்கில் நோயாளிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு மருத்துவ மனையின் செயல்முறைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு வலுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட் டது. திரு லீயின் மகன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!