இணையம் வழியாக கைபேசிகள் வாங்க முயன்ற 25க்கும் மேற்பட் டோர் (கடந்த நவம்பர் மாதம் முதலான கணக்குப்படி) புதிய வகை இணைய வர்த்தக மோச டிக்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களுக்குத் தெரியாமலேயே கடனில் தள்ளப்பட்டதாக போலி சார் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தவணைமுறைத் திட்டத்தில் கைபேசி வாங்க முற்பட்ட சிலர் தங்களது அடையாள அட்டை எண், 'சிங்பாஸ்' அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை அளித்து சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக் கப்பட்டது. அந்த வங்கிக் கணக்குகளில் பணம் நிரப்பிய மோசடிக்காரர்கள், பின்னர் வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தரக் கோரினர். சிலருக்கு கைபேசிகள் வாங்க கடன் வழங்கப்பட்டது. சிலர் கடன் வாங்க சம்மதம் தெரிவிக்காவிட்டாலும் அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் நிரப்பப்பட்டு பின்னர் வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கோரப்பட்டது. போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அறிமுகம் இல்லா தவர்களிடம் தனிப்பட்ட தகவல் களை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொருட் கள் ஏதும் வாங்கினாலும் தேவை யில்லாத தகவல்களை வழங்கக் கூடாது என்றும் கூறப்பட்டது. தாங்கள் கோராமலேயே தங்க ளது வங்கிக் கணக்கில் பணம் இருப்பதைக் கண்டுபிடித்தால், அதைக்கொண்டு பரிவர்த்தனை எதையும் செய்யாமல், அதுபற்றி போலிசிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிக்கை தெரிவித்தது.
வங்கிக் கணக்கில் பணம் போட்டு வட்டியுடன் கட்டச் சொல்லி புதிய மோசடி
1 mins read

