எஸ்ஜி வெஹிக்கள்ஸ் நிறுவனத்துக்கு தடையாணை

‘எஸ்ஜி வெஹிக்கள்ஸ்’ கார் இறக்குமதி நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடு வதை நிறுத்தவேண்டி, சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் சங்கம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடையுத் தரவு கோரி விண்ணப்பித்தது. 
அந்த நிறுவனத்தைப் பற்றி 2015ஆம் ஆண்டு முதல்  வாடிக் கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், ‘கேஸ்’ எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் அந்த நிறுவனத்தின் மீது இரு முறை களங்கம் கற்பித்தது ஆகிய வற்றின் அடிப்படையில் அந்தத் தடையாணை நேற்று முன்தினம் முதல் நடப்புக்கு வந்துள்ளது. ‘எஸ்ஜி வெஹிக்கள்ஸ்’  நிறுவனம் அதன் மீதான புகார்களை மறுத்து உரைக்காததில் இருந்து, பயனீட் டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தகம்) சட்டத்தின்கீழ், அந்த நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடுவது தெளிவாகியுள்ளது என்று சிங்கப் பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் சங்கம் (சிசிசிஎஸ்) நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ‘கேஸ்’ அமைப்பு அந்த நிறுவனத் துக்கு எதிராக மொத்தம் 92 புகார்களைப் பெற்றுள்ளது. தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீதான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. 
வாகன உரிமைச் சான்றிதழ் ஏலம், வாகனங்களை விநியோ கிக்கும் தேதிகள் ஆகியவற்றின் தொடர்பில் அந்த நிறுவனம் விதிமுறைகளை மீறியிருப்பதாக பயனீட்டாளர்கள் குறிப்பிட்டுள் ளனர். இணக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிடுமாறு ‘எஸ்ஜி வெஹிக்கள்ஸ்’ நிறுவனத்தை ‘கேஸ்’ அமைப்பு 2017ஆம் ஆண் டில் கோரியது. ஆனால் அந்த நிறுவனம் அதனை மறுத்துவிட்டது. 
நேற்று முன்தினம் விதிக்கப் பட்ட நீதிமன்ற உத்தரவின்படி, ‘எஸ்ஜி வெஹிக்கள்ஸ்’ நிறுவனம், அதன் இயக்குநர் ஜூலியட் டான் வை பெக் ஆகியோர் கீழ்க்கண்ட வற்றிலிருந்து தடுத்துவைக்கப்பட்டு உள்ளனர்.