சுடச் சுடச் செய்திகள்

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

சிங்கப்பூரின் பரபரப்பான சாலையான ஆர்ச்சர்ட் ரோட்டில் அதிவேகத்தில் சென்ற மின்-ஸ்கூட்டர் ஒன்று சிறுவனை இடித்ததால் கோபமடைந்த தந்தைக்கும் மின்-ஸ்கூட்டர் ஓட்டியவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
ஃபேஸ்புக்கின் பல்வேறு குழுக் களின் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.
காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை விசாரித்து வரு கின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த அண்டி யூவ் மாய், வெள்ளிக் கிழமை இரவு 9.00 மணிக்கு ஆர்ச்சர்ட் ஷாப்பிங் செண்டருக்கு வெளியே நடைபாதையில் மின்-ஸ்கூட்டர் வேகமாக சென்றதாகக் கூறினார்.
“அப்போது நடைபாதையில் வந்து கொண்டிருந்த சிறுவனை அவர் இடித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை மின்-ஸ்கூட்டர் ஓட்டியவர் மீது ஒரு குத்துவிட்டார். அருகில் இருந்த ஒரு பெண் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்,” என்று திரு அண்டி சொன்னார்.
சில வலைப்பதிவாளர்கள் மின்-ஸ்கூட்டரை ஓட்டியவர் ‘டெலிவரு’ ஓட்டுநர் என்று அடையாளம் கண்டுபிடித்துள் ளனர்.
இது பற்றி கேட்டபோது ‘டெலி வரு’ பேச்சாளர் ஒருவர், சம் பவத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய பேச்சாளர், நடைபாதையர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மின்-ஸ்கூட்டர்காரர் நடந்துகொண் டதாக தெரியவந்தால் அவரது சேவையைப் பயன்படுத்த மாட் டோம். விசாரணையில் அதிகாரி களுக்கு உதவுவோம்,” என்று சொன்னார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து புகார் வந்துள்ளதை காவல்துறை யினர் உறுதிபடுத்தியிருக்கின்ற னர். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon