சுடச் சுடச் செய்திகள்

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது

மத்திய விரைவுச்சாலையில் நிகழ்ந்த மோசமான விபத்தில் 28 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கொல்லப்பட்டார். 
இதையடுத்து கவனக்குறை வாக வாகனம் ஓட்டியதாக பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புனித வெள்ளிக்கிழமை இரவு ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் பிராடல் ரோடு/லோரோங் சுவான் வெளி யேறும் பாதைக்கு முன்பு நான்கு கார்கள் மோதிய விபத்து நிகழ்ந் தது.
இதில் சிக்கிய மோட்டார் சைக் கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் சிறு காயங்களை அடைந்த காரின் 31 வயது பெண் ஓட்டுநரும் மோட்டார் சைக்கிளில் பின்பக்கம் அமர்ந்து சென்ற 22 வயது பெண்ணும் சுயநினைவுடன் முறையே செங்காங் பொது மருத்துவமனையிலும் டான் டோக் செங் மருத்துவமனையிலும் சேர்க் கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. 
ஆனால் பெண் ஓட்டுநர் கவனக்குறைவாக காரை ஓட்டி யிருக்கலாம் என்று நம்பப்படு கிறது.
விபத்துக்குப் பிறகு மத்திய விரைவுச் சாலையின் தடம் 1 முதல் தடம் 5 வரை வாகனமோட்டிகள் தவிர்க்குமாறு நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் நிலப்போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டது.
மத்திய விரைவுச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் சமூக ஊடகங்களில் வெளியான புகைப் படங்கள் காட்டின. ஒரு படத்தில் சாம்பல் நிற செடான் காரின் இடது பக்கம் மோசமான அளவுக்கு சேதமடைந்திருந்தது. விபத்துக்குள்ளான வாகனங்களை பல இழுவை வாகனங்கள் அகற்று வதையும் ஒரு காணொளி காட்டி யது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon