'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அமைச்சர்களும் சமய அமைப்புகளும் இலங்கையில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்ட இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் இலக்குக் கொண்டிருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார்.


"குடும்பம், நண்பர்களுடன் பிரார்த்தனைக்காக சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்ட னர். பயங்கரவாதிகளின் இந்த அற்பத்தனமான வன்முறைச் செயல் அதிர்ச்சி அளிக்கிறது," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டார். அமைதியையும் நிலைத்தன் மையையும் கட்டிக்காக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்குச் சிங்கப்பூர் துணை நிற்பதாக பிரதமர் லீ தெரிவித்து உள்ளார். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸŸல்கிஃப்லி, கொடுமையான தாக்குதல்கள் நிகழ்ந்த நிலையில் மக்கள் ஒற்றுமையுடன் இருப்பது முக்கியம் என்றார்.

இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன.

சிங்கப்பூரர்கள் எவருக்கும் பாதிப்பில்லை
இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்களில் சிங்கப்பூரர் எவரும் பாதிக்கப்பட்டதாக இது வரை தகவல் இல்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சுக் கூறியது. தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் கொழும்பில் உள்ள கௌரவ தூதரை யீ94 77-00-44-868 என்ற எண்ணில் அல்லது வெளியுறவு அமைச்சின் 24 மணி நேர சேவையான யீ65 6379-8800/8855 என்ற எண் ணில் தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!