செங்காங் வெஸ்டில் பல சமய நோக்குடன் புதிய ஆலயம் மே மாதம் திறக்கப்படும்

செங்காங் வெஸ்டில் பல சமய நோக்குடன் புதிய ஆலயம் மே மாதம் திறக்கப்படும்

1 mins read
ad6e3b02-ad12-471a-9d8e-af1c813c3f9e
தை ஹுவா குவான் நன்னெறிச் சங்கம் வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள 'ஸ்கை லைன்' கட்டடத்தில் நேற்று நடத்திய 14வது அறப்பணி புத்தர் நன்கொடை திரட்டை தொடங்கி வைத்த கல்வி அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்) அதிர்ஷ்டத்துக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள நன்கொடை புத்தரைத் தொடுகிறார். படம்: திமத்தி டேவிட் -

லாபநோக்கமற்ற அமைப்பான தை ஹுவா குவான் நன்னெறிச் சங்கம் செங்காங் வெஸ்டில் பல சமய நோக்குடன் ஒரு புதிய ஆலயத்தை நடத்த உள் ளது. அடுத்த மாதம் 20ஆம் தேதி திறக்கப்படவுள்ள அந்த ஆலயத்தில் பல்வேறு சமயங் களைப் பற்றிய நூல்களைக் கொண்ட நூலகம் இருக்கும். மேலும், அச்சங்கம் வெவ் வேறு சமயத் தலைவர்களும் குழுக்களும் நடத்தும் சொற் பொழிவுகள், கலந்துரையாடல் கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யும் என்று அதன் தலைவர் திரு லிம் கிம் சியாங் நேற்று தெரிவித்தார். தை ஹுவா குவான் ஆலயம் ஃபெர்ன்வேல் லிங்கில் உள்ள 2,000 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் அமையும். அந்த நிலத்தில்தான் 2014ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியிலான அஸ்திமாடம் கட்டப் படுவதற்கான திட்டம் அறிவிக் கப்பட்டபோது சில குடியிருப்பா ளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப் பினர். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டில் ஒரு புதிய ஏலக்குத் தகை விடுக்கப்பட்டு, அதில் தை ஹுவா குவான் வெற்றி பெற்றது. அங்கு தனது முதலா வது ஆலயம் அமைக்கப்படும் என்று அச்சங்கம் அறிவித்தது. புதிய ஆலயக் கட்டடம் நான்கு மாடிகளும் அடித்தள கார் நிறுத்து மிடமும் கொண்டது என்று அறி வித்த சங்கத்தின் தலைவர் திரு லீ, "எங்கள் போதனைகள் எப்போ தும் பல சமயங்கள் அடிப்படையில் இருந்து வந்துள்ளன.